காலேஜ் குமார் – விமர்சனம்
அரிவாள், வெட்டு, குத்து , துப்பாக்கி என்று வன்முறை அதிகமாகிவிட்ட தமிழ்ப்படங்களில், குடும்பப் பாங்கான திரைப்படங்கள் என்பது அரிதாகிப்போவதில் ஆச்சரியம் இல்லைதான். பாண்டியராஜ் போன்ற இயக்குநர்கள் புண்ணியத்தில் அவ்வப்போது குடும்பக் கதையம்சங்கள் கொண்ட படங்கள் காணக்கிடைக்கின்றன.
குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு படத்தைத் தந்ததற்காகவே இயக்குநர் ஹரி சந்தோஷுக்கு முதலில் ஒரு பாராட்டுப் பத்திரத்தை வாசித்து விடலாம். 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வந்த பெரும் வெற்றி பெற்ற காலேஜ் குமார் படத்தை தமிழில் இயக்கி தமிழ்ப்படவுலகுக்கு வந்திருக்கிறார் ஹரி சந்தோஷ்.
மகனை படி படி எந்த நேரமும் தொந்தரவு செய்து, எப்போதும் அவன் முதல் மதிப்பெண்தான் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் தந்தை பிரபு. மகனால் ஏன் சரியாகப் படிக்க முடியவில்லை என்றுகூட யோசிக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகன் ராகுல் விஜய் நீ வே...
