‘ஜோதி’ திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை வழங்குகிறது கலர்ஸ் தமிழ்!
உணர்ச்சிகர புலனாய்வு திரில்லர் திரைப்படமான ஜோதி திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை வழங்குகிறது கலர்ஸ் தமிழ்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 16 ஞாயிறு அன்று இந்த அதிரடி திரைப்படத்தின் ப்ரீமியரை கண்டு இரசியுங்கள்!
சென்னை, 13 அக்டோபர், 2022: ஏராளமான திருப்பங்களையும், அதிரடி நிகழ்வுகளையும் கொண்ட, திகிலூட்டும் மர்ம கதையான ஜோதி திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை, வயாகாம் 18 தமிழ தொலைக்காட்சி பிரிவான கலர்ஸ் தமிழ், இந்த ஞாயிறு அக்டோபர் 16 பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பவிருக்கிறது. பவர்டு பை பிரித்வி விமன்ஸ்’ இன்னர்வேர்ஸ் மற்றும் நலம் தரும் ஆர்கேஜி நெய் மற்றும் வசந்த் & கோ வழங்கும் இத்திரைப்படத்தில் நடிகர் வெற்றி மற்றும் நடிகை ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். திகிலும், மர்மமும் கலந்த இத்திரைப்படத்தின் கதையமைப்புகளும், அதிரடி நிகழ்வ...









