Tuesday, June 16

Tag: comedy actor muthukaalai

மூன்று பட்டங்கள் பெற்ற நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் வழங்கிய தங்க_மெடல்!

மூன்று பட்டங்கள் பெற்ற நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் வழங்கிய தங்க_மெடல்!

News
படித்து மூன்று பட்டங்கள் பெற்றதற்காக நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் #தங்க_மெடல் வழங்கியது! தென்னிந்திய #நடிகர்_சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் (08.09.2024) இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் முத்துக்காளைக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் பொறிக்கப்பட்ட தங்க மெடல் வழங்கப்பட்டது! படித்து பட்டம் பெற்ற தனக்கு, நடித்து பெயர் வாங்க காரணமான நடிகர் சங்கம் தங்க மெடல் வழங்கியது, யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் நடிகர் முத்துக்காளை! நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், செயலாளர் விஷால், கார்த்திக், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார் நடிகர் முத்துக்காளை!...
B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற முத்துகாளை!

B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற முத்துகாளை!

News
நகைச்சுவை ஸ்டண்ட் நடிகர் முத்துகாளை நேற்று வெளியான B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் . ஏற்கெனவே இவர் தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ( TAMIL NADU OPEN UNIVERSITY ) யில் 2017 ஆண்டில் B.A HISTORY யில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் 2019 இல் M.A TAMIL முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் நேற்று வெளியான B.Lit தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் . பட்டதாரி ஆக வேண்டும் என்ற கனவு இப்போது ( மூன்று ) பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆக்கியிருக்கிறது. முத்துகாளைக்கு நண்பர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்....
6’ம் ஆண்டாக “குடியில்லா தீபாவளியை” கொண்டாடும் காமெடி நடிகர் முத்துக்காளை!

6’ம் ஆண்டாக “குடியில்லா தீபாவளியை” கொண்டாடும் காமெடி நடிகர் முத்துக்காளை!

News
காமெடி நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியம் (B.Lit) இரண்டாம் ஆண்டு தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ஆல் பாஸ் ஆகியுள்ளார்! 'ஆல்கஹால் அனானிமஸ்' என்ற 'ஏஏ' அமைப்பில் இணைந்து, கடந்த 5' வருடங்களாக குடி பழக்கத்தை விட்டு விட்டு, குடியில்லாத வாழ்க்கையை மகிழ்சியாக 6'ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் முத்துக்காளை! தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பி.ஏ வரலாறு படித்து, இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு, எம்.ஏ தமிழ் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு பட்டங்கள் பெற்ற நிலையில், தொடர்ந்து படித்து வருகிறார்! இளமையில் வறுமையின் காரணமாக படிக்காததால், தற்போது படப்பிடிப்பிற்கு இடையிடையே தொடர்ந்து படித்து வருகிறார்! கல்வியில் "டாக்டர் பட்டம்" வாங்குவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு, நடித்தும், படித்தும் வருகிறார் காமெடி நடிகர் முத்துக்காளை!...