மூன்று பட்டங்கள் பெற்ற நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் வழங்கிய தங்க_மெடல்!

0

Loading

படித்து மூன்று பட்டங்கள் பெற்றதற்காக நடிகர் முத்துக்காளைக்கு நடிகர் சங்கம் #தங்க_மெடல் வழங்கியது!

தென்னிந்திய #நடிகர்_சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் (08.09.2024) இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் முத்துக்காளைக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் முகம் பொறிக்கப்பட்ட தங்க மெடல் வழங்கப்பட்டது!

படித்து பட்டம் பெற்ற தனக்கு, நடித்து பெயர் வாங்க காரணமான நடிகர் சங்கம் தங்க மெடல் வழங்கியது, யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் நடிகர் முத்துக்காளை!

நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், செயலாளர் விஷால், கார்த்திக், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார் நடிகர் முத்துக்காளை!

Share.

Comments are closed.