’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்!
சினிமாவில் கேமராவுக்கு முன்பு இருப்பவர்கள் தான் மக்களிடம் பிரபலமாவதோடு, ஊடகங்களின் அங்கீகாரத்தையும்
பெறுவார்கள், என்ற விதியை ஒரு சிலர் தங்களது பணியின் மூலம் உடைத்து கேமராவுக்கு பின்னாள் பணியாற்றும் தொழில்நுட்ப
கலைஞர்களாலும் கவனம் ஈர்க்க முடியும், என்பதை நிரூபித்து காட்டுவார்கள்.
அப்படிப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களில் ஒருவராக தனது படத்தொகுப்பு மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்
படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்.
பிரபல படத்தொகுப்பாளர் பி.லெனின் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய C.S.பிரேம் குமார், ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்கு லெனினுடன் இணைந்து படத்தொகுப்பு செய்தவர், ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து , ’குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, V1 , ‘ஹவுஸ் ஓனர்’ரூம்’ உள்ளிட்ட பல படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்...
