டி டி நெக்ஸ்ட் லெவல் _ விமர்சனம்
டி டி நெக்ஸ்ட் லெவல் _ விமர்சனம்
ஒரே மாதிரியான காமெடி கம் பேய் படங்களை பார்த்து சலித்தவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட டி டி நெக்ஸ்ட் லெவல் படம் வேறு லெவல் நகைச்சுவை அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
திரைப்படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்பவர்களை தனக்குச் சொந்தமான திரையரங்குக்கு வரவழைத்து கொலை செய்கிறார் பேயாக உலவும் செல்வராகவன்.
புதிய படம் ஒன்றின் பிரீமியர் ஷோவுக்கு youtube சினிமா விமர்சகரான சந்தானத்தை குடும்பத்துடன் வரச் சொல்லி அழைப்பு அனுப்புகிறார் செல்வ ராகவன்.
குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்ற சந்தானம், ஆள் அரவமற்ற அமானுஷ்ய அமைதியுடன் அந்த அரங்கம் இருப்பதைக் கண்டு பயத்துடன் திரும்பி விடுகிறார்.
ஆனால் அவரது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி, மற்றும் தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிரீமியர் ஷோ பார்ப்பதற்கு அந்தத் திரையரங்குக்கு சென்று செல்வராகவனிடம் மாட்டிக் கொள்...
