சல்மான் கானின் “தபாங் 3” செய்தியாளர்கள் சந்திப்பு!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது.
தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். படம் தமிழ் மொழியில் வெளியாவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சல்மான்கான் பேசியதாவது...
“வாண்டட்” படத்தின் ஷீட்டிங் ஒரு மாதம் இங்கு சென்னையில் நடந்தது. அப்புறம் சீயான் விக்ரமின் சேதுவை ரீமேக் செய்து நடித்திருக்கிறேன். எப்போதும் தென்னிந்திய படங்களை ரிமேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. நடிகராக ம...

