தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வான “நடுவன்” திரைப்படம்!
நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது!
இயக்குநர் ஷரன் குமார் இயக்கத்தில், நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் ஷரன் குமார் கூறுகையில்.. ,
12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2022 க்கு எங்கள் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் படத்தினை தேர்வு செய்த ஜூரி மெம்பர்களுக்கு நன்றி. பாராட்டுக்கள் எந்த வடிவத்தில் கிடைத்தாலும் அது எப்போதும் வரவேற்க தகுந்ததே. எங்கள் திரைப்படம் வெளியான போதிலிருந்தே நேர்மறையான வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் பாராட்டுகளை குவித்து வருகிறது. உலக திரைப்பட திருவிழாவான சிங்கப்பூர்,...
