Tuesday, October 20

Tag: darshan

தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!

தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!

News
பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான 'பேராண்மை' மற்றும் 'வனமகன்' போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த  'தும்பா' படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்...
குழந்தைகளை குதூகலப்படுத்த வருகிறது தும்மா!

குழந்தைகளை குதூகலப்படுத்த வருகிறது தும்மா!

News
அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு  வந்திருந்த புலி தும்பா வேண்டுமானால் அழையா விருந்தாளியாக இருந்திருக்கலாம் (விளம்பர வீடியோவில்), ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமும், அதில் இருக்கும் குழந்தைகளும் புலி தும்பாவின் ராஜாங்கத்துக்குள் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த கோடையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் படமாக தும்பா இருக்கிறது. மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.   குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, "தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது. இருவருமே பயணக்கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும...
தும்பா

தும்பா

News
சில நேரங்களில் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்கள் தான் லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெறும் என்ற மாயையை சில விஷயங்கள் பிடிவாதமாக உடைக்கும். ஒரு சிலர் இதனை 'லக்' என்று அவர் சொல்லலாம், ஆனால் உண்மை மற்றும் யதார்த்தம் என்னவெனில் ரசிகர்கள் நல்ல மற்றும் மிகச்சிறப்பான கதை, ஐடியாக்களுக்கு காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் 'தும்பா' வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் YouTubeல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது இதை நிரூபணம் ஆக்குகிறது.   அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை  வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, "இதைப் பற்றி நான் என்ன சொல்றது?, இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக ...
தர்ஷன் நடிக்கும் புதிய படம்…

தர்ஷன் நடிக்கும் புதிய படம்…

News
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்த 'கனா' படத்தில் அப்பாவியான புன்னகை, யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவை மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் நடிகர் தர்ஷன். இந்த படத்தையும், இதை வெற்றி படமாக்க உழைத்த ஒவ்வொரையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.  நடிகர் தர்ஷன் மட்டும் விதிவிலக்கல்ல. தர்ஷன் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒருவராக மாறியிருக்கிறார். இந்நிலையில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP & ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். 'ப்ரொடக்‌ஷன் நம்பர் 1' என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஹரிஷ் ராம் LH இயக்குகிறார். அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்துக்கு இசையமைப்பது அனைவரின் கவனத்தையும் படத்தின் மீ...