தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது!
"சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி" - இயக்குனர் தயாள் பத்மநாபன்!
“கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”. பின்னர் இதனை "அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார்.
2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில்...
