திரையில் மட்டும் இல்லை. நிஜத்திலும் டாக்டர்தான்தீபா பாலு!
'ஹார்ட்பீட்' வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்!
கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட்பீட்' வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த 'தேன்மிட்டாய்' சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தி...
