Wednesday, September 2

Tag: Dhoni Entertainment

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர்!

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர்!

News
மகத்தான கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். LGM...
தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் 'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... '' இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் தயாரிப்பாகும். எம். எஸ். தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற...
வேகமாக வளர்ந்து வரும் ‘எல். ஜி. எம்’

வேகமாக வளர்ந்து வரும் ‘எல். ஜி. எம்’

Uncategorized
தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இது தொடர்பாக தோனி என்டர்ட...
தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனி!

தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனி!

News
  இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. ' வுமன்'ஸ் டே அவுட் ' என்ற பெயரில் புற்றுநோ...