தரமான பொருளை குறைவான விலையில் வழங்கும் திரைப்பட இயக்குநர்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். ஒரு புறம் பொருளாதார மந்த நிலை, மறுபுறம் சுகாதாரத்துறையின் எச்சரிக்கை, அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் பொது முடக்கம்.. என மக்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு உதவு செய்வதற்காக திரைப்பட இயக்குநர் பி ஆனந்த்தின் மனதில் ஒரு திட்டம் உதித்தது. இவர் ‘ஒரு மழை நான்கு சாரல்கள்,’ ‘மௌன மழை,’ ‘பாரதபுரம்,’ ‘நானும் பேய் தான்’,‘ துணிந்து செய் ’.என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.
இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசுகையில்,“ நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்த்து,ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள விசயத்தை செய்யவேண்டும் என்று முடிவு செய்து, முகலிவாக்கத்தில் ‘ப...
