Friday, September 25

Tag: director bala

கோலாகலமாக நடந்த பாலா-25 & ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா!

கோலாகலமாக நடந்த பாலா-25 & ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா!

News
25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்! 1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z...
இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணம்!

இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணம்!

Uncategorized
இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! வணக்கம்! கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம். அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது. அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா. பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம். அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா. அதுவரை திறமை...
வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை!

வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை!

News
வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு! இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’ ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பட வெளியீட்டை நோக்கி போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் எஸ்.சரவணன் என்பவர் ‘வணங்கான்’ என்கிற டைட்டிலை இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாண்புமிகு. வேல்முருகன் எஸ்.சரவணன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ம...
இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு!

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு!

News
இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு! _நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்! எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை. தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் பாலாவின் கவனத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து சம்பந்த...