Thursday, September 3

Tag: director cheran

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குனர் சேரன்!

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குனர் சேரன்!

News
தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்! 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட 'இஷ்க்' மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார். 'நரிவேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படைப்பு எ...
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த ‘தமிழ்க்குடிமகன்’!

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த ‘தமிழ்க்குடிமகன்’!

News
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு! லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, 'மிக மிக அவசரம்' புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்றது...
படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்!

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்!

News
படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்! பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்துள்ளார். சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.  ...
“சேரன் சேரப்பாவாக மாறியது என் நல்ல நேரம்” – மகிழ்ச்சி வெள்ளத்தில் ராஜாவுக்கு செக் இயக்குனர்

“சேரன் சேரப்பாவாக மாறியது என் நல்ல நேரம்” – மகிழ்ச்சி வெள்ளத்தில் ராஜாவுக்கு செக் இயக்குனர்

News
பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.. மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா சுண்டாட்டம், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் ...
சேரன் பிக்பாஸுக்கு ஏன் போனார்?

சேரன் பிக்பாஸுக்கு ஏன் போனார்?

News
தோல்வியின் போது மதிக்காத இந்த உலகத்தின் மீதான கோபம். யார் வந்து நீங்கள் பாரதி கண்ணம்மா கொடுத்த சேரன்னு தாங்கிப் பிடிச்சீங்க? வெற்று சொற்கள் இன்று மேல்பூச்சு பூச மட்டுமே பயன்படும். உண்மையான இந்த வாழ்க்கையின் இடிபாடுகளில் சிக்கித் திணறும் சேரனை அவர் மீட்டெடுக்க வேண்டும். ட்வீட்டர் கணக்கை சரிசெய்ய போன போது ஒரேநாளில் 1500 ஃபாலோயர்ஸ் கொண்டு வந்தேன். அப்போ சொன்னார் மூணு வருசமா முந்நூறு கூட தாண்டாம இருந்துச்சு. இப்போ 1500.. இந்த K ன்லா சொல்றாங்களே அது எப்போ வரும்னு ஒரு மாதிரி கோணலா முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார். பின் நாமளும் ஒரு வெற்றி கொடுக்கணும்ல... கொடுத்துருவோம்ன்னார். இங்கு சாதிச்சவங்க திறமையானவர்கள்னு இல்லை. வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். சேரன் அண்ணா தன்னை எல்லோர் கண்ணுக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை படைப்பாளி... அது இதுன்னு இப்போ கொண...
பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழையத் தயாராகும் இயக்குனர்  சங்ககிரி ராஜ்குமார்!

பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழையத் தயாராகும் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்!

News
அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி. ஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி" அய்யய்யோ சேரன் சிகரெட் எல்லாம் குடிக்க மாட்டாரே.." என்று புலம்பிய போது ஒரு நடிகரை நம் மக்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது ஒட்டுமொத்த தமிழகமே தன் வீட்டுப் பிரச்சினை போல் எண்ண...