Saturday, April 26

சேரன் பிக்பாஸுக்கு ஏன் போனார்?

Loading

தோல்வியின் போது மதிக்காத இந்த உலகத்தின் மீதான கோபம். யார் வந்து நீங்கள் பாரதி கண்ணம்மா கொடுத்த சேரன்னு தாங்கிப் பிடிச்சீங்க?

வெற்று சொற்கள் இன்று மேல்பூச்சு பூச மட்டுமே பயன்படும். உண்மையான இந்த வாழ்க்கையின் இடிபாடுகளில் சிக்கித் திணறும் சேரனை அவர் மீட்டெடுக்க வேண்டும்.

ட்வீட்டர் கணக்கை சரிசெய்ய போன போது ஒரேநாளில் 1500 ஃபாலோயர்ஸ் கொண்டு வந்தேன். அப்போ சொன்னார் மூணு வருசமா முந்நூறு கூட தாண்டாம இருந்துச்சு. இப்போ 1500.. இந்த K ன்லா சொல்றாங்களே அது எப்போ வரும்னு ஒரு மாதிரி கோணலா முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.

பின் நாமளும் ஒரு வெற்றி கொடுக்கணும்ல… கொடுத்துருவோம்ன்னார்.

இங்கு சாதிச்சவங்க திறமையானவர்கள்னு இல்லை. வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்.

சேரன் அண்ணா தன்னை எல்லோர் கண்ணுக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரை படைப்பாளி… அது இதுன்னு இப்போ கொண்டாடி அனுதாபம் பார்க்க அவசியமில்லை.

இந்த உலகத்தின் பாதையில் பயணிக்க தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் அவர் விரைவில் உயர்த்தப்படுவார்.

– ஆ.ஜான், பி.ஆர்.ஓ.