கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!
'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.
'அக்னி சிறகுகள்' படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.
அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது.
இது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்..
"அல்மதி நகரி...


