
உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்துள்ள ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினர்!
மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்துள்ள 'மார்கழி திங்கள்' திரைப்பட குழுவினர்!
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் 'மார்கழி திங்கள்' திரைப்பட குழுவினர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்களை இன்று சந்தித்த 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு சுசீந்திரன், இயக்குநர் திரு மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அவரிடம் சமர்ப்பித்தனர்.
தங்களது உடல் உறுப்பு...