பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா!
பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா!
*பன்னாட்டு திரை பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழாவில்
இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) சிறப்பு விருந்தினர் விஜய் சேதுபதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன.*
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்கும் நோக்கத்தில் பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் இயக்குநர் திரு.வெற்றிமாறன் அவர்களால் 19-08-2022 அன்று நிறுவப்பட்டது. இந்நிறுவனம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி இன்று மேற்கண்ட படிப்புகள் துவங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன், நிறுவனத் தலைவர் வெற்றிமாறன்...



