வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம்!

0

 17 total views,  2 views today

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

‘காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான் “மாஸ்க்”. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் .

இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக
பிஹைன்ட் வுட்ஸ் சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா ,சார்லி, ருஹானி ஷர்மா ,பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு
G.V. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். இன்று மாஸ்க் திரைப்படம் பூஜையுடன்
இனிதே தொடங்கியது.

கிராஸ் ரூட்  ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

*நடிகர்கள்*
கவின்
ஆண்ட்ரியா
ருஹாணி ஷர்மா
சார்லி
பாலா சரவணன்
VJ அர்ச்சனா சந்தோக்

*தொழில் நுட்பக்கலைஞர்கள்*
தயாரிப்பு நிறுவனம்:
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி
பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
எழுத்து இயக்கம்: விகர்ணன் அசோக்
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: ஆர் டி ராஜசேகர்
படத்தொகுப்பு: ஆர் ராமர்
கலை: ஜாக்கி
ஆடை அலங்காரம்: பூர்த்தி விபின்
ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்
தயாரிப்பு: வெற்றிமாறன்
SP சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்

Share.

Comments are closed.