Saturday, October 25

Tag: director vetrimaran

வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ படத்தின் முதல் பார்வை!

வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ படத்தின் முதல் பார்வை!

News
இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வை! நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை! ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார். வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு 'மெல்லிசை' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அப்பா- மகள் இட...
‘விடுதலை பார்ட் 2’  டப்பிங் பணிகள் தொடக்கம்!

‘விடுதலை பார்ட் 2’ டப்பிங் பணிகள் தொடக்கம்!

News
நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்! நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் இன்று (அக்டோபர் 10, 2024) சென்னையில், 'விடுதலை பார்ட்2' படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர் என்பதை இயக்குநர் வெற்றிமாறன் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “திரைப்படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, அதன் கதை சொல்லலுக்கு ஆத்மார்த்தமான உயிர் கொடுப்பது டப்பிங்தான். இருப்பினும், 'விடுதலை பார்ட்2' படத்தின் டப்பிங் தொடங்குவதற்கு முன்பே படத்தின் அழகையும் ஆன்மாவையும் எங்களால் உணர முடிந்தது. படத்தின் இறுதி வெளியீட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில், இந்தப் படத்தைப் பார்வையாளர்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார். 'விடுதலை பார்ட் 1' படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து 'விடுத...
வெற்றிமாறன்+வேல்ஸ் இணைந்து வழங்கும் இலவச திரைப்படக் கல்வி!

வெற்றிமாறன்+வேல்ஸ் இணைந்து வழங்கும் இலவச திரைப்படக் கல்வி!

News
வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும் இலவச திரைப்படக் கல்வி! வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி B.Sc Film Studies (3 Years), M.Sc. Film and culture studies (2 years), PG Diploma in Media skills (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறு...
விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

News
’விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்! ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி - சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’ திரையிடப்படத் தேர்வாகியுள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. இப்போது, இது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதாவது புனேவில் நடைபெற்ற புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியு...