Friday, August 28

Tag: Divya

திருமண வாழ்வில் இணைந்த சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா!

திருமண வாழ்வில் இணைந்த சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா!

News
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ். கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த அர்ணவ்வுக்கும் இவருக்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது. கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா....
கல்தா -ஒரு புதுமைப் படைப்பு!

கல்தா -ஒரு புதுமைப் படைப்பு!

News
'தெரு நாய்கள்', ' படித்தவுடன் கிழித்து விடவும்' போன்ற இயக்கிய எஸ்.ஹரி உத்ரா தனது மூன்றாவது படத்துக்கு 'கல்தா' என்று பெயர் வைத்தன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, காக்கா முட்டை சசி,சுரேஷ் முத்து வீரா, பழைய ஜோக் தங்கதுரை மற்றும் ராஜ சிம்மன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹரி உத்ரா தெரிவித்ததாவது... இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னை குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது. இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரச...