தமிழக அரசிற்கு எம்.எல்.ஏ. கருணாஸ் கோரிக்கை!
தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொடந்து நான் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். நான் மட்டுமன்றி பலர் போராடினர். இப்போது தமிழக அரசு செவிசாய்த்துள்ளது. அதே சமயம் முரண்பாடுகளானவற்றையும் களையவேண்டும்.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என...
