26 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘டூ லெட்’..!
தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார்.
கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்ச...

