கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவில் டு லெட்

0

 320 total views,  1 views today

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படவிழாவில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டு லெட் திரைப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுதல்களை அள்ளிக்குவித்த இப்படத்துக்கு கோவாவிலும் கைதட்டல் பலமாவே இருந்தது.

அடுத்த நாள் மீடியா சென்டரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது, பிரபல இயக்குநர்கள் பலரின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுபவம்தான் தன்னை இயக்குநராக்கியது என்றும், வாடகை வீடு தேடும் வேட்டையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்தே டு லெட் படத்தை இயக்கியதாகவும் குறிப்பட்டார் செழியன்.
தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் பலரும் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கு பெற்றனர்.

Share.

Comments are closed.