Wednesday, September 2

Tag: Dr.Shivarajkumar

ஐந்து மொழிகளில் உருவான ‘45’ திரைப்படம்!

ஐந்து மொழிகளில் உருவான ‘45’ திரைப்படம்!

News
பிரமாண்ட உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது ! கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் பெங்களூருவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த எதிர்பார்ப்பு நிறைந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இசையமைப்பாளராக புகழ்பெற்று தற்போது இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் அவர்கள், ‘45’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழு...
டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகும்சிவராஜ்குமாரின் “45: த மூவி” !

டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகும்சிவராஜ்குமாரின் “45: த மூவி” !

News
கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது! சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிம...
வரவேற்பை பெற்று வரும் 45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்!

வரவேற்பை பெற்று வரும் 45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்!

News
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்! “45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க...
டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு!

டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு!

News
  'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு* தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர். சிவராஜ்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். 'இடி மின்னல் காதல் 'படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும...

சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்!

News
சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு! கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது ந...
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஜாவா’!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஜாவா’!

News
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’! பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களின் இதயங்களைக் கவர ஒரு சில நடிகர்களால் மட்டுமே முடியும். அதில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் ஒருவர். பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரது கன்னட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் அவரது திரை இருப்பு மற்றும் ஸ்டைலான ஸ்வாக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நடிகர் சிவராஜ்குமார் 'ஜாவா’ படத்தின் மூலம் தமிழில் நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இந்தப் படம்...
ராம் சரணுடன் இணைந்த சிவ ராஜ்குமார்!

ராம் சரணுடன் இணைந்த சிவ ராஜ்குமார்!

News
குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்த, கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் ! குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படமான #RC16 ல் கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் இணைந்துள்ளார். RRR இன் உலகளாவிய வெற்றி, முன்னணி நட்சத்திரமான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. உப்பேனா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் அறிமுகமான பரபரப்பான இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் தனது 16வது படத்திற்காக ராம் சரண் இணைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் உயர்தர தொழில்நுட்பத்துடன், மிகப்பெரும் பட்ஜெட்டில், பெரிய கேன்வாஸில...

‘உத்தரகாண்டா’ படத்தில் சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்!

News
"உத்தரகாண்டா" படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக் தோற்றம் வெளியாகியுள்ளது! கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் "உத்தரகாண்டா" படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் "மாலிகா" வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவண்ணாவின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. டாக்டர்.சிவராஜ்குமார் மாஸ் மாஸ்டராக இருப்பதால், புதுமையான வழிகளில் தனது புதிய அவதாரங்கள் மூலம் ரச...