திரெளபதி – விமர்சனம்
திரெளபதி - விமர்சனம்
நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும், பெரும் பொருள் செலவில் உருவாகும் படங்களுக்கும் திரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பான விளம்பரங்கள் கிடைப்பது வழக்கம்தான் என்றாலும், 'திரெளபதி' போன்ற குறைந்த பட்ஜெட் படம் திரைக்கு வரும்முன்பே பரபரப்பைக் கிளப்பியது மிக அரிதாக நடைபெறக்கூடிய விஷயம்தான். கிரவுட் பண்டிங் முறையில் குறைந்த செலவில் தயாரான 'திரெளபதி' திரைப்படம் தரமான முறையில் உருவாக்கப்பட்ட படம் என்றே சொல்லலாம்.
பரபரப்பைக் கிளப்பக்கூடிய கதையம்சம் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநர் மோகனை பாராட்டலாம். அதையும் கத்தி மேல் நடப்பதுபோல் நேர்த்தியாக திரையில் சொன்னதற்காக ஒரு பாராட்டு விழாவையே நடத்தலாம்.
நாயகன் ரிச்சர்ட் தனது மனைவி ஷீலா மற்றும் மனைவியின் ஒன்று விட்டதங்கையையும் (சித்தப்பா மகள்) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வருகிறார். ...
