டங்கி படத்திலிருந்து டிராப் 7 ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியானது!
ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் 'மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா'- வெளியாகியுள்ளது!
ராஜ்குமார் ஹிரானியின் “டங்கி” திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தத் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் அனைத்து வயது பார்வையாளர்களிடமிருந்தும் அபரிமிதமான அன்பை பெற்று வரும் அதே வேளையில், இது NRI பார்வையாளர்களின் வாழ்க்கையை நெருக்கமாக பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் பெரும் அன்பையும் பெற்றுள்ளது. இதயத்தை தாக்கும் கதையுடன் இப்படத்தின், இசை ஆல்பமும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ஹார்டி மற்றும் மனு இடையே படத்தில் காட்டப்பட்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் அழகான டங்கி டிராப் 7 'மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா' பாடலை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
“...
