Wednesday, January 22

டங்கி படத்திலிருந்து டிராப் 7 ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியானது!

Loading

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியாகியுள்ளது!

ராஜ்குமார் ஹிரானியின் “டங்கி” திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தத் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் அனைத்து வயது பார்வையாளர்களிடமிருந்தும் அபரிமிதமான அன்பை பெற்று வரும் அதே வேளையில், இது NRI பார்வையாளர்களின் வாழ்க்கையை நெருக்கமாக பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் பெரும் அன்பையும் பெற்றுள்ளது. இதயத்தை தாக்கும் கதையுடன் இப்படத்தின், இசை ஆல்பமும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ஹார்டி மற்றும் மனு இடையே படத்தில் காட்டப்பட்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் அழகான டங்கி டிராப் 7 ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’ பாடலை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

“டங்கி” படத்தின் கதை மக்களால் விரும்பப்பட்டதைப் போலவே, அதன் பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. படத்தின் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஒவ்வொரு பாடலும் மிக நன்றாக வெளிப்படுத்துகின்றன. அதில் மிக முக்கியமான பாடலான, நம் இதயத்தைத் தொடும் ஒரு மெல்லிசை டங்கி டிராப் 7 ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’ இப்போது வெளியாகியுள்ளது. இந்த மெல்லிசைப் பாடல், மனதை உருக்கி நம்முள் ஆழமான உணர்வுகளை தூண்டிவிடுகிறது. நம் அன்பு என்றும் மறையாது, நம்மை விரும்பும் அன்பு, மீண்டும் நம்மை எவ்விதத்திலாவது வந்து சேர்ந்து விடும், என்பதை ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா, ஆழமாகச் சொல்கிறது.

டன்கி டிராப் 7’மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’
பாடல், அமிதாப் பட்டாச்சார்யாவின் கவர்ச்சியான பாடல் வரிகளில், அற்புதமான ப்ரீதம் இசையில் மனதை மகிழ்விக்கிறது. இந்தப் பாடலை விஷால் மிஸ்ரா, ஸ்ரேயா கோஷல், ஷதாப் ஃபரிடி மற்றும் அல்தமாஷ் ஃபரிதி ஆகியோர் அழகாகப் பாடியுள்ளனர்.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர்.

https://bit.ly/MainTeraRastaDekhunga