எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு _ விமர்சனம்
நடிகர்கள் : ஷரத், ஐய்ரா, மதன் தக்ஷினாமூர்த்தி, கஞ்சா கருப்பு, இளையா, நரேன்
இயக்கம்: ஹரி உத்ரா
இசை: அலி மிர்சாக்
ஒளிப்பதிவு: வினோத் ராஜா
கால்பந்து விளையாட்டு திறமையால் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை மையப்படுத்திய கதை.
அன்றாட வாழ்க்கையே நகர்த்த அல்லல்படும் சிலரின் மகன்கள் கால்பந்து விளையாட்டில் திறமையாக இருப்பதை கண்டு, வாத்தியார் என்று அழைக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மாவட்ட அளவில் விளையாட தயார் செய்ய முனைப்பு காட்டுகிறார்.
விளையாட்டு மூலமே வேலை வாய்ப்புக்களை பெற்று வாழ்க்கையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
உள்ளூர் தொழிலதிபர் கம் ரவுடியான
ரத்தினம் என்பவர் இந்த இளைஞர்கள் விளையாட போய்விட்டால் தன் கம்பெனிக்கு(?) வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்(!) என்று தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறாமல் தடுக்கிறார்.
இதற்கு நியாயம்...
