எலக்சன் _ விமர்சனம்
சேத்து மான் என்ற மாறுபட்ட படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவான படம் என்பதால் நமது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை சற்றும் குறையாமல் முழுமையாக நிறைவேற்றுகிறது எலக்சன் திரைப்படம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஜார்ஜ் மரியான் தான் ஏற்றுக் கொண்ட கட்சியின் அப்பழுக்கற்ற தொண்டர்.
கட்சித் தலைமை இவரைப் போன்ற தொண்டர்களைகளை அடிமட்ட தொண்டராகத்தான் வைத்திருக்க விரும்பும் தவிர பதவியோ பொறுப்பு கொடுக்க விரும்பாது.
ஊராட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது ஜார்ஜ் மரியனுக்கு. அவரது மகன் விஜயகுமார் சுயமாகயாக களம் இறங்குகிறார்.
ஜாதி செல்வாக்கு, பணபலம், அடியாள் ஆதிக்கம், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் மோதல், என்று நிகழும் ஏகப்பட்ட உள்ளடி வேலைகளுக்கு மத்தியில் விஜயகுமார் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் எலக்சன் திரைப்படம்.
உறியடி...
