எலக்சன் _ விமர்சனம்

0

 21 total views,  1 views today

சேத்து மான் என்ற மாறுபட்ட படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவான படம் என்பதால் நமது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை சற்றும் குறையாமல் முழுமையாக நிறைவேற்றுகிறது எலக்சன் திரைப்படம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஜார்ஜ் மரியான் தான் ஏற்றுக் கொண்ட கட்சியின் அப்பழுக்கற்ற தொண்டர்.

கட்சித் தலைமை இவரைப் போன்ற தொண்டர்களைகளை அடிமட்ட தொண்டராகத்தான் வைத்திருக்க விரும்பும் தவிர பதவியோ பொறுப்பு கொடுக்க விரும்பாது. 

ஊராட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது  ஜார்ஜ் மரியனுக்கு. அவரது மகன் விஜயகுமார் சுயமாகயாக களம் இறங்குகிறார்.

ஜாதி செல்வாக்கு, பணபலம், அடியாள் ஆதிக்கம், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் மோதல், என்று நிகழும் ஏகப்பட்ட உள்ளடி வேலைகளுக்கு மத்தியில் விஜயகுமார் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் எலக்சன் திரைப்படம்.

உறியடி துவங்கி ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான கதைக்களத்துடன் தேர்வு செய்யும் விஜயகுமாரின் முயற்சி இந்த முறையும் பிரமாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

அவரது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு நடிக்கும் வாய்ப்பு இதில் அதிகம். கிடைத்த பந்த்துக்களை எல்லாம் சிக்ஸருக்கு விலாசுவதுபோல் அத்தனை வாய்ப்புக்களையும் ஸ்கோர் செய்கிறார் விஜயகுமார்.

படத்தின் மிகப்பெரிய பலம் எழுத்தாளர் அழகிய பெரியவன், விஜயகுமார், இயக்குனர் தமிழ் ஆகியோர் இணைந்து எழுதிய வசனங்கள் தான். பல இடங்களில் வசனங்கள் கைதட்டல்களில் அரங்கை அதிர வைக்கின்றன.

அயோத்தி படத்தில் கவனம் ஈர்த்த பிரீத்தி அஸ்ராணி இதில் வலுவான கதாபாத்திரத்தில் மிகத் திறம்பட நடித்திருக்கிறார். அதேபோல் பாவல் நவகீதனும் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பது மனதை கொள்ளை கொள்கிறது.

கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்துடன் இணைந்து பயணித்திருக்கிறது.

மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவும் காட்சிக்குத் தேவையான வகையில் அமைந்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

அரசியல் படங்கள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்ந்த பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் உள்ளாட்சி அரசியலின் அனைத்து பரிமாணங்களையும் அப்படியே வெளிப்படுத்தும் எலக்சன் படம் பார்வையாளர்களின் அரசியல் கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைத்து சிந்தனையைக் கிளறும் என்பதில் ஐயமில்லை. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எலக்‌ஷன்.

மதிப்பெண் 4/5

Share.

Comments are closed.