இ மெயில் _ விமர்சனம்
நாயகிக்குத் திடீரென ஒரு இமெயில் வருகிறது.
அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் பரிசு காத்திருப்பதாக தகவல் வருகிறது.
அதே போல் நாயகி செய்ய… கொரியரில் லம்ப்பாக பணம் வருகிறது.
பணத்துக்கு ஆசைப்படும் நாயகி அந்த விளையாட்டுக்குள் முழுமையாக இறங்க… அவள் மீது கொலைப்பழி விழுகிறது.
அவளை இப்படி சிக்கலில் மாட்டிவிட்டவர்கள் யார்.. அதிலிருந்து நாயகி தப்பித்தாளா… என்பதே கதை.
முருகா படத்தில் நடித்த அசோக் குமார் நாயகனாக நடித்து உள்ளார். பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயின்.இவருக்குத்தான் படத்தில் முக்கியத்துவம்.
அதற்கேற்ற நடிப்பை அளித்துள்ளார். வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது, அலுவலகத்தில் அவமானப்படுவது போன்ற காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.
அதே போல சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்கிற நிலையில் புலியாக மாறி அதிரடி காட்டுகிறார். சண்டைக் காட்சிகளிலும்...
