பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் இணைந்து வெளியிடும் ‘என்டூரேஜ்’ பாடல்!
பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் ஆகியோர் ஏடிஜி & கைபா பிலிம்ஸுடன் இணைந்து வெளியிடும் ‘என்டூரேஜ்’ பாடல்!
நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய கெய்பா இன்க் தலைவரான திருச்சியைச் சேர்ந்த டெல் கே கணேசன் தற்போது ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸின் புதிய பாப் மற்றும் ராப் இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார்.
பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென்ன ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள ‘பிக் ஓ’ என்று அழைக்கப்படும் பிரபலமான பாடகர் ஒமர் குடிங், 'களோனியல் கசின்ஸ்' பாடகர் லெஸ்லீ லூஸிஸுடன் இனைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கியுள்ளார். கெய்பா பிலிம்ஸ் தயாரித்த இந்த பாடலுக்கு ஏடிஜி என பிரபலமாக அறியப்படும் அஸ்வின் கணேசன் இசையமைத்துள்ளார்.
'என்டூரேஜ்' என்பது ராப் மற்றும் பாப் வகையின் இணைவு. பாடலின் ஒலிப்பதிவில் ஒ...
