பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் இணைந்து  வெளியிடும் ‘என்டூரேஜ்’ பாடல்!

0

 127 total views,  1 views today

பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் ஆகியோர் ஏடிஜி & கைபா பிலிம்ஸுடன் இணைந்து  வெளியிடும் ‘என்டூரேஜ்’ பாடல்!

நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய கெய்பா இன்க் தலைவரான திருச்சியைச் சேர்ந்த டெல் கே கணேசன் தற்போது ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸின் புதிய பாப் மற்றும் ராப் இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார்.

பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென்ன ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள ‘பிக் ஓ’ என்று அழைக்கப்படும் பிரபலமான பாடகர் ஒமர் குடிங், ‘களோனியல் கசின்ஸ்’ பாடகர் லெஸ்லீ லூஸிஸுடன் இனைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கியுள்ளார். கெய்பா பிலிம்ஸ் தயாரித்த இந்த பாடலுக்கு ஏடிஜி என பிரபலமாக அறியப்படும் அஸ்வின் கணேசன் இசையமைத்துள்ளார்.

‘என்டூரேஜ்’ என்பது ராப் மற்றும் பாப் வகையின் இணைவு. பாடலின் ஒலிப்பதிவில் ஒரு புத்துணர்ச்சி இருக்கும், இது ரசிகர்களை ஈர்க்கும். ஏடிஜி ஒரு இளம் இசை தயாரிப்பாளர்-இசையமைப்பாளர் ஆவார். இசையை உருவாக்கும் போது நோக்கம் மற்றும் நம்பிக்கையின் மீது தீவிர உணர்வைக் கொண்டு செயல்படுவது அவரது பாணியாகும்.

‘என்டூரேஜ்’ என்பது லெஸ்லீ லூயிஸின் உணர்ச்சிபூர்வமான பங்களிப்புடன் ஒமர் குடிங்கின் கலிஃபோர்னிய வைப் ராப்பின் கலவையாகும். இந்தப் பாடல் மிகவும் கலகலப்பானது. வீடியோவுடன் இந்த பாடலை கேட்போரை வேறொரு உலகத்திற்கு இது அழைத்துச் செல்வது உறுதி.

பாடலைப் பற்றி உமர் குடிங் கூறுகையில், “இந்த பாடல் எனது வாழ்க்கையை வகைப்படுத்துகிறது, இதன் காரணமாக பாடல் வரிகளுடன் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. லெஸ்லீ லூயிஸ் மற்றும்
ஏடிஜி உடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பாடல் காலம் கடந்து வாழக்கூடியது. ”

“இயக்குநராக ரிக்கி புர்சலின் படைப்பாற்றல் உயர்ந்த நிலையில் உள்ளது. யதார்த்தமாகவும் திறமையுடனும் காட்சிகளை அமைத்துள்ளார். ஏடிஜியின் நேர்த்தியான பணி மற்றும் அவரது உழைப்பின் காரணமாக இந்த பாடல் ஒரு ரத்தினமாக மாறியுள்ளது. இந்த பாடலின் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ”, என்று லெஸ்லீ லூயிஸ் கூறுகிறார்.

தயாரிப்பாளர்-இசையமைப்பாளர் ஏடிஜி கூறுகையில், ”இந்த பாடலை கேட்பவர்களுக்கு ஒரு பரவசமான மற்றும் உற்சாகமான பயணத்தை நாங்கள் மூவரும் வழங்க விரும்பினோம். இசையில் மட்டுமல்லாமல், குரலிலும் ரிதம், ராப் மற்றும் பாப் ஆகியவற்றின் கலவையாக இது உருவாகி உள்ளது. தரத்தில் சமரசம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. பாடல் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதை அதை பார்க்கும் போது நீங்கள் உணர்வீர்கள். ”

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக டெல் கணேசன் கூறுகையில், “மிகக் குறுகிய காலத்தில் பாடல் அற்புதமான வரவேற்பை பெற்றது. இந்த பெரும் வரவேற்பின் காரணமாக பாடலுக்கான இசை வீடியோவை வெளியிட நாங்கள் முடிவு செய்தோம். ”

கைபா பிலிம்ஸ் இந்தப் பாடலை தயாரித்துள்ளது. டெல் கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோத்தீஸ் ஆகியோர் உருவாக்கிய இந்த தயாரிப்பு நிறுவனம், செலிபிரிட்டி ரஷ், கிறிஸ்மஸ் கூப்பன், டெவில்ஸ் நைட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. இதை தவிர சமீபத்தில் வெளியான லியாம் நீசனின் தி மார்க்ஸ்மேன் படத்தை விநியோகம் செய்தது.

இந்தப் பாடல் 2021 ஜனவரி 29 ஆம் தேதி பிரபலமான இசை தளங்களான ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்றவற்றில் வெளியானது. ஜூலை 16 ஆம் தேதி காலை 9 மணி (US ) மற்றும் மாலை 6.30 மணிக்கு (IST ) கியாபா பிலிம்சின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இப்பாடல் வெளியிடப்படும்.

Share.

Comments are closed.