எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்
எதற்கும் துணிந்தவன் - விமர்சனம்
படத்தின் துவக்கத்திலேயே காவல் அதிகாரி ஒருவர், நல்லாசிரியர் வருது பெற்ற ஒருவர் என ஐந்து பேரை சூர்யா கொலை செய்வதாக காட்சி அமைக்கப்பட்டிருப்பதால் நிமிர்ந்து உட்கார்ந்து ஒருவிதமான எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்காமல் விறுவிறுப்பான ஒரு குடும்பச் சித்திரத்தை தந்ததற்காகவே இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்ட வேண்டும்.
தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உப்பு புளி காரம் என சகல மசாலா அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பச் சித்திரமாக எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் சூர்யாவின் துணையோடு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
பெண் கொடுத்து பெண் எடுத்து ஒற்றுமையாக வாழ்ந்த வடநாடு, தென்னாடு என்ற இரு ஊர்காரர்களுக்கும் ஒரு பெண் தற்கொலை காரணமாக பிரச்னை ஏற்படுகிறது. வக்கீலான ...
