நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ஆண்ட்ரியா!
'எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி!
வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம்.
நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது 'எழுந்து வா'. இந்தப் பாடல் குறித்து 'எழுந்து வா' பாடல் குழுவினரிடம் கேட்ட போது "சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன.
நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வ...
