சென்னையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கம்!
திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் "ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா" கருத்தரங்கம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
*படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை தொழில்நுட்பத்துடன் கலந்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர்*
ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து "ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா" எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது.
திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை த...
