ஃப்ரைடே _ விமர்சனம்
ஃப்ரைடே விமர்சனம்
கேங்ஸ்டர் கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல்,நான் லீனியர் முறையில் வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ஃப்ரைடே.
கூலிக்காக அடிதடி மற்றும் கொலைகள் செய்யும் கூட்டம் ஒன்றின் அடியாட்களில் ஒருவராக அனீஸ் மாசிலாமணி வேலை பார்க்கிறார்.
தன்னைப்போலவே தன் தம்பியும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, சமீபத்தில் திருமணமான தன் தம்பிக்கு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் தன் அண்ணனுக்கு தெரியாமல், ஒரு கொலை செய்வதற்கு சென்றவர்களுடன் உடன் சென்ற அனீஸ் மாசிலாமணியின் தம்பி எதிர்பாராத விதமாக கே பி ஒய் தீனாவால் சுடப்படுகிறார்.
கே பி ஒய் தீனாவால் ஏன் அவர் சுடப்படுகிறார்?
தம்பி கொல்லப்பட்டதை அறிந்த அனீஸ் மாசிலாமணி அதன் பிறகு என்ன செய்கிறார் என்பதுதான் பிரைடே படத்தின் கதை.
அடிதடி குத்துவெட்டு என்று இருந்தாலும் தன் குடும்பத்தாரிடம் பாசத்தை பொழிவதும், தம்பி த...
