ஜென்டில்மேன் II’ படப்பிடிப்பு துவங்கியது!
சென்னையில் 'ஜென்டில்மேன் II' படப்பிடிப்பு துவங்கியது!
மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'.
ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்-9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.
தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர்
டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து ஆக்ஷன் சொல்ல.. படபிடிப்பு ஆரம்பமானது. முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர்.
எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்...

