Tag: Ghibran
சிம்பு தேவன் இயக்கும் கசட தபற!
வழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும்போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் பிரபலமான விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, "திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம், ஆனால் இதில் உள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பார்க்கும்போது, அது நிரூபணம் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம...
‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.
இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, "இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்கு தான் முன்னுரிமை தருவார்கள். ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரி...
பூஜையுடன் துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’…
தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான 'தனுசு ராசி நேயர்களே'வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இன்று காலை எளிய சம்பிரதாய பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.
ஹரீஷ் கல்யாண், ரெபா ஜான...
ஏசியன் அரப் அவார்ட் பெறும் இசையமைப்பாளர் ஜிப்ரான்!
இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது மிக மகிழ்ச்சியான, கொண்டாட்டமான ஒரு தருணம். ஏனெனில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, 'ASIAN ARAB AWARD 2019' என்ற விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளனர். அவரது அதீதமான இசை நம் மனதை துளையிட்டு அதன் அடி ஆழத்துக்கு செல்லும். பல அடுக்குகளை கொண்ட அவரது பாடல்கள் மிக சிறப்பாக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. கொண்டாட்டங்கள் என்பது தாய்நாட்டில் மட்டுமல்ல, அவை நாடு மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.
இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, "எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே. எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யா ...
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய “ஹவுஸ் ஒனர்”
ஜனரஞ்சகமான மசாலா சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே தடமில்லாமல் மறைந்து போவதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களே தங்கள் திறமையை தடமாக பதிப்பதில் முனைப்போடு இருப்பார்கள். இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. விரைவில் வெளிவர இருக்கும் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் ஜனரஞ்சகமும், சிந்தனையை தூண்டும் கருத்தும் ஒருங்கே கொண்ட படமாகும்.
“ஆரோகனம்” மற்றும் “அம்மினி” ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் “ஹவுஸ் ஒனர்” சமிபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
“ வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்...




![House Owner – Official Teaser [With Subtitles]](https://newcinemaexpress.com/storage/2019/03/Capture-18.png)