Tag: GNR Kumaravelan
அருண் விஜய் நடிக்கும் “சினம்”!
தமிழ் சினிமாவில் சமீபமாக வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.
சினம் எனும் வலிமை மிகுந்த தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது...
எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம...
ஆரம்பமானது அருண் விஜயின் அடுத்த படம்!
“ஹரிதாஸ்“ திரைப்படம் மூலம் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இயக்குநர் GNR குமரவேலன் தனது திறமையை வெளிக்கொணரும் அடுத்த படைப்பில், தமிழ் சினிமாவின் வெற்றி நாயகரான அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார். அருண் விஜய் இப்படத்தில் தன் வெற்றியின் உற்சாக அடையாளமான குற்றம் 23 படத்தின் காக்கி உடையை மீண்டும் இப்படத்தில் அணிய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று செப்டம்பர் 11 அன்று சிறிய அளவிலான பூஜையுடன் துவங்கியது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இயக்குநர் நரேன் மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
படம் பற்றி இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது....
இப்படம் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் புதிதா...

