குட் பேட் அக்லி _ விமர்சனம்
குட் பேட் அக்லி _ விமர்சனம்
அஜித் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை கலக்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய டானாக திகழ்ந்திருக்கிறார் ஏ கே என்ற அஜித் குமார்.
மனைவி திரிஷாவுக்கு குழந்தை பிறந்த போது அதை பார்க்க ஆவலுடன் சென்ற அஜித்துக்கு தடை விதிக்கிறார் திரிஷா. டான் வாழ்க்கையின் கருப்பு நிழல் தன் மகன் மீது விழக்கூடாது என உறுதியாக த்ரிஷா சொல்ல, போலீசில் சரணடைந்து சிறைச்சாலைக்கு செல்கிறார் அஜித்.
அஜித் ஒரு பிஸ்னஸ் மேன் என்று சொல்லி ஸ்பெயின் நாட்டில் தன் மகனை வளர்த்து வருகிறார் த்ரிஷா .
செல்வாக்கு மிக்கவரான அஜித், சிறைச்சாலையில் இருந்தபடியே வீடியோ காலில் அவ்வப்போது மகனுடன் பேசுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகி மகனை காண ஸ்பெயின் செல்லும்...
