Sunday, September 20

Tag: gowtham vasudev menan

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப் பயணம்!

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப் பயணம்!

News
'என்னோடு வா வீடு வரைக்கும்': கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி! பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் 'என்னோடு வா வீடு வரைக்கும்' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவர் கௌதம் மேனன். அவரது படங்களின் காலத்தால் அழியாத இசையை மீண்டும் மேடையில் கொண்டுவர உள்ளது இந்த நிகழ்ச்சி. இந்த இசை நிகழ்ச்சியில், கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் முக்கிய அங்கமாக இருந்த பிரபல பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இணைய உள்ளனர். கார்த்திக், சித் ஸ்ரீராம், பிளேஸ், பால் டப்பா, ஆல்போன்ஸ், ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா மற்றும் சாருலதா மணி உள்ளிட்ட நட்சத்திரக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ...
ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

News
ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’! இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் புதிய திறமையாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்கும் விதமாக அவர்களுடன் இணைந்து பல இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறது. ஒரு ஊரில் ஒரு ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் திரைப்படங்கள், உயர்தர இசை வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் பிற ஒரிஜினல் கண்டெண்ட்களைத் தயாரித்து வருகிறது. நம் வழக்கமான பாரம்பரிய சினிமாவிற்கு அப்பாற்பட்டு பலதரப்பட்ட பார்வையாளர்களின் பாராட்டுகளையும் இது பெற்று வருகிறது. ஒன்ட்ராக ஒரிஜினல்ஸ், ஒரிஜினல் மற்றும் சுயாதீன இசைக்கான அவர்களின் பிரிவு, அதன் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. இதைத்தாண்டி அடிக்கடி புது தீம் மற்றும் ஜானர்களையும் அது முயற்சி செய்து பார்த்து வருகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் மற்றும் புது இசைக்கலைஞர்க...
200+ திரையரங்குகளில் நாளை வெளியாகும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’

200+ திரையரங்குகளில் நாளை வெளியாகும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’

News
“ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்! உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வேல்ஸ் ஃபிலிம் ...
‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன்!

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன்!

News
"அனைத்து சண்டைக்காட்சிகளிலும் பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது" - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்! பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறனுக்காக புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவும் அவர் ஒருபோதும் தவறுவதில்லை. தற்போது அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன்-பேக் படமாக அமைந்து சந்தேகத்திற்கு இடமின்றி பார்வையாளர்களைக் கவரும். இப்படம்  (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தை கெளதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுக...
ஹாலிவுட் படம் போல ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பிய ‘ஜோஷ்வா இமை போல காக்க’!

ஹாலிவுட் படம் போல ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பிய ‘ஜோஷ்வா இமை போல காக்க’!

News
’ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் நாயகன் வருண் பேசியதாவது, "இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். என்னை சிறந்த நடிகராக மாற்றிய கெளதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஒரு ஜாலியான லவ் படம். ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்‌ஷன் படம். 'மாவீரன்', 'ஜவான்' படங்களில் பணிபுரிந்த யானிக் ...
மார்ச் 1 அன்று வெளியாகும் ஜோஷ்வா இமை போல காக்க’

மார்ச் 1 அன்று வெளியாகும் ஜோஷ்வா இமை போல காக்க’

News
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது! தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக ஆக்‌ஷன் க...