Wednesday, September 2

Tag: GV Prakash Kumar

கவிதாலயா தயாரிப்பில் நடிக்கும் ஜி வி பிரகாஷ் குமார்!

கவிதாலயா தயாரிப்பில் நடிக்கும் ஜி வி பிரகாஷ் குமார்!

News
டிஸ்னி ஹாட் ஸ்டார் - கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது! ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய ச...
’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்!

’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்!

News
’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்! கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஃபேன் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. மகேஷ் CP நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜானவி, ஃபெஸி, அரவிந்த் MN, விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் இசையமைக்க, பவன் கவுடா படத்தொகுப்பு செய்கிறார். சசி தூரி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார். க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதேபோல், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட, சமூக வலைதளங்களில் வைரலானதோடு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. ...
G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடல்!

G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடல்!

News
“சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது. Double Meaning Productions நிறுவனத்தின் புதிய இசை லேபிள் மூலம் முதல் வெளியீடாக, G.V. பிரகாஷ் நடிப்பில், “அடங்காதே” படத்தின் பாடலை வெளியிடுகிறது. Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் இயக்குநர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது... சில திரைப்படங்களை தயாரித்தவன் என்கிற முறையில் ஒரு படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த நெருக்கத்தையும், படத்திற்கு மிகச்சிறந்த விளம்பரத்தையும் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் தான் Double Meaning Productions சார்பில், புதியதொரு மியூசிக் லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளோம். இந்நிறுவனத்தின் முதல் வெளீயீடாக, எங்கள் பெருமைமிகு படைப்பான ...
ஜி.வி.பிரகாஷின்  “மகாத்மா மனிதர்கள்”!

ஜி.வி.பிரகாஷின் “மகாத்மா மனிதர்கள்”!

News
ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல விஷயங்கள் அப்படியே புதைக்கப்பட முடியாது என்பதை காலம் மற்றும் அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. இது தான் அத்தகைய பிரமுகர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவர்களை சந்திக்கும் ஒரு பயணத்தில் இறங்கியிருக்கிறார். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, "இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை வெள...