Saturday, September 19

Tag: gv prakash

ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை குவித்து வரும் ‘அடியே’!

ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை குவித்து வரும் ‘அடியே’!

News
*வசூலில் சாதனை படைத்து வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் 'அடியே'* மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த 'அடியே' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக 'அடியே' வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது. அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரைய...
‘ஓ பெண்ணே ‘மியூசிக் ஆல்பத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடிக் கொடுத்த பாடல்!

‘ஓ பெண்ணே ‘மியூசிக் ஆல்பத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடிக் கொடுத்த பாடல்!

News
சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் மியூசிக் வீடியோ.திரைப்பட ஊடகத்திற்கான எந்த வரையறைகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாக உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள் மேலை நாடுகளில் புகழ் பெற்று விட்டன. இம்முயற்சிகள் இங்கேயும் தொடங்கி ஒரு பக்கம் தொடர்ந்து வருகின்றன. அப்படி ஒரு மியூசிக் ஆல்பமாக 'ஓ பெண்ணே ' என்கிற பெயரில் ஒரு படைப்பு உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்திற்கு , ஏற்கெனவே சில இசை முயற்சிகள் மூலம் பெயர் பெற்றவரும் எழுமின், வேட்டை நாய் படங்களின் இசை அமைப்பாளருமான கணேஷ் சந்திரசேகரன் வரிகள் எழுதி இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக தனுஷ், யோகி பி, அனிருத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். மேலும் இசைத்துறை சார்ந்த திரையுலக முன்னணி இசைக்கலைஞர்களுடன் நட்புடன் இருப்பவர். கணேஷ் சந்திரசேகரன் இந்த ஆல்பத்திற்கான பாடலை எழுதியவு...
ஜீவியின் ‘செல்ஃபி’யை தொடர்ந்து ‘ஐங்கரன்; ஆஹா தமிழில் வெளியாகிறது!

ஜீவியின் ‘செல்ஃபி’யை தொடர்ந்து ‘ஐங்கரன்; ஆஹா தமிழில் வெளியாகிறது!

News
  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவா...
“அமீகோ கேரேஜ்” படத்தில்  ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடியபாடல் !  

“அமீகோ கேரேஜ்” படத்தில் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடியபாடல் !  

News
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும், “அமீகோ கேரேஜ்” படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய மெலோடி பாடல் ! முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில்,  இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர். சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார்.  இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர். திரையுலகின் முன்னணி  இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் காந்தக்குரலும், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் வசீகர குரலும் இணைந்து, இப்பாடலை மிக அற்புத அனுபவமாக மாற்றியுள்ளது...
‘இடி முழக்கம்’ தமிழ்ப்படத்தில் பாடிய மலையாள நடிகர் வினீத் சீனிவாசன்!

‘இடி முழக்கம்’ தமிழ்ப்படத்தில் பாடிய மலையாள நடிகர் வினீத் சீனிவாசன்!

News
Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் , இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படத்தில் மலையாள திரையுலகத்தில் புகழ்பெற்ற வினித் சீனிவாசன், ஒரு பாடலை பாடியுள்ளார்! தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, தயாரித்து வரும் Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், பிக்பாஸ் முகேன் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. NR.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மலையாளத் திரையுலகில் பெரும...
சீனு ராமசாமி இயக்கத்தில் இணையும் GV பிரகாஷ் குமார் காயத்திரி சங்கர்!

சீனு ராமசாமி இயக்கத்தில் இணையும் GV பிரகாஷ் குமார் காயத்திரி சங்கர்!

News
தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, தயாரித்து வரும் Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் இன்று (ஆகஸ்ட் 2, 2021) தனது நிறுனத்ததின் அடுத்த தயாரிப்பான “Production No.2” படத்தினை துவங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தினை இயக்குகிறார். இன்று காலை ஆண்டிபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் எளிமையான விழாவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் முதல் காட்சிக்காக கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறும்போது ... எங்கள் நிறுவனத்தின் “Production No.2” கடவுளின் அருளுடன் நல்ல நாளில் துவங்குவது மிகுந்த மகிழ்ச்சி. தேசிய விருதை வென்ற இயக்குநர் சீனு ராமசாம...
ஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்”!

ஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்”!

News
ஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்”! தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாக நடிக்க , இயக்குநர் சசி அவர்களின் உதவியாளராக இருந்து இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார் சதீஷ் செல்வகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான Think Music நிறுவனம் பெற்றிருப்பதில் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. Axess Film ...
நவீரா சினிமாஸின் முதல் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்!

நவீரா சினிமாஸின் முதல் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்!

News
நவீரா சினிமாஸின் 'புரொடக்‌ஷன் நம்பர் ஒன்': ஜி.வி.பிரகாஷ் நாயகனாக ஒப்பந்தம்! எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். 'அசுரன்' படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் 'சூரரைப் போற்று' பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தியுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம். தான் நடித்து வரும் படங்களின் பணிகளை ஒவ்வொனெறாக முடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவரது நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்றது. கொரோனா வழிமுறை பின்பற்றி இந்தப் படப்பூஜையில் அனைவரும் கலந்துக...