Saturday, September 19

Tag: gv prakash

நெப்போலியன், ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஆங்கிலப் படம் ‘டிராப் சிட்டி’!

நெப்போலியன், ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஆங்கிலப் படம் ‘டிராப் சிட்டி’!

Uncategorized
கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தனது பொழுதுபோக்கு திரைப்படமான ‘ட்ராப் சிட்டி’க்கு தயாராகியுள்ளார். இதில் முன்னணி தமிழ் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். டெல். கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோதியோஸ் ஆகியோர் தொடங்கிய கைபா பிலிம்ஸ், மிச்சிகனில் இருந்து ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டெல் கணேசனின் முந்தைய படமான டெவில்’ஸ் நைட் டிஜிட்டலில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ட்ராப் சிட்டி படத்தை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடு...
சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ஜி.வி பிரகாஷ்!

சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ஜி.வி பிரகாஷ்!

News
நடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த  அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke  magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில்  இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பி...
ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக அமைந்த கூர்கா!

ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக அமைந்த கூர்கா!

News
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். கூர்கா இதுவரை பார்த்த வழக்கமான நகைச்சுவை படங்கள் போல இருக்காது. வித்தியாசமான படமாக இருக்கும். யோகிபாபு மிகச்சிறந்த நகைச்சுவையை கொடுக்கும் ஆற்றலை உடைய ஒரு நடிகர், சாம் ஆண்டன் நகைச்சுவைக்கென ஒரு தனி மீட்டர் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் சார்லி. காமெடியை எப்படி கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குனர் சாம் ஆண்டன். யோகிபாபு இரவு பகலாக, தூங்க கூட நே...
ஜி.வி.பிரகாஷின்  “மகாத்மா மனிதர்கள்”!

ஜி.வி.பிரகாஷின் “மகாத்மா மனிதர்கள்”!

News
ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல விஷயங்கள் அப்படியே புதைக்கப்பட முடியாது என்பதை காலம் மற்றும் அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. இது தான் அத்தகைய பிரமுகர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவர்களை சந்திக்கும் ஒரு பயணத்தில் இறங்கியிருக்கிறார். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, "இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை வெள...
தரமான லோக்கல் படம் ‘குப்பத்து ராஜா’

தரமான லோக்கல் படம் ‘குப்பத்து ராஜா’

News
எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.   உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.   நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை...
குப்பத்து ராஜா படத்தில் அறிமுகமாகும் பாலக் லால்வானி!

குப்பத்து ராஜா படத்தில் அறிமுகமாகும் பாலக் லால்வானி!

News
எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரை பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் தேவையான விஷயம். அத்தகைய அனைத்து குணாதிசயங்களுடன், பாலக் லால்வானி ஏற்கனவே அனைவரது கவனத்தையும், குறிப்பாக குப்பத்து ராஜா ட்ரைலர் மூலம் ஈர்த்திருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.    "இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சா...
தனித்துவமான கதையம்சம் கொண்ட  ‘குப்பத்து ராஜா’

தனித்துவமான கதையம்சம் கொண்ட ‘குப்பத்து ராஜா’

News
அவரது நடனம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, புகழப்படுபவையாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார்.   சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங...