Tuesday, September 22

Tag: gvprakash

“அசுரன் படத்தில் நடித்தது மிகப் பெரிய கொடுப்பினை” – தனுஷ்

“அசுரன் படத்தில் நடித்தது மிகப் பெரிய கொடுப்பினை” – தனுஷ்

News
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாபாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக  இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிட...
“குப்பத்து ராஜா”  படத்தில் பார்த்திபனுக்கேற்ற பாத்திரம்!

“குப்பத்து ராஜா” படத்தில் பார்த்திபனுக்கேற்ற பாத்திரம்!

News
  சென்னை சார்ந்த திரைப்படங்களின் முகமாக இருந்து வருகிறார் நடிகர் பார்த்திபன். அவரது படங்களில் பெரும்பாலானவை வடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கையை மிகச்சரியாக பிரதிபலிப்பவை. அவர் நடித்த படங்களோ அல்லது இயக்கிய படங்களோ, அவற்றில் பெரும்பாலானவை நேட்டிவிட்டியை உள்ளடக்கியவை. தற்போது வெளியாகவிருக்கும் அவரது படத்தின் தலைப்பு "குப்பத்து ராஜா" பார்த்திபன் குணாதியசத்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. முழுக்க அந்த பகுதியை சார்ந்த கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.   இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, "குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன், முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது. எல்லோரும் ஜிவி பி...