ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்
ஐங்கரன் - திரைப்பட விமர்சனம்
தனது சொந்த ஊரில் வசிக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்துபவர். தனது கண்டு பிடிப்புகளை அரசாங்கத்து அனுப்பி அங்கீகாரம் பெற முயலும் அவரது முயற்சிகள், அரசு அதிகாரிகளால் தோல்வி அடைகின்றன.
நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து இங்குள்ள நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபடத் திட்டமிடுகிறது. திட்டப்படி இரண்டு நகைக்கடைகளில் கொள்ளை அடித்து விடுகின்றனர்.
கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் செல்ல முற்படும்போது எதிர்பாராமல் அந்த நகைகள் இருக்கும் பை ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்து விடுகிறது. ஊழலில் ஊறிப்போன போலீஸ் அதிகாரி ஒருவர், கொள்ளையடித்த நகைகளில் பாதி பங்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொள்ளையர்கள் நகைப்பையை மீட்பதற்கு துணை நிற்கிறார்.
கொள்ளையர்களின் திட்டம் நிறைவேறாமல் எப்படி ஜி.வி.பிரகாஷ் தடுத்தார் ...
