Wednesday, October 28

Tag: iffi 2018

26 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘டூ லெட்’..!

26 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘டூ லெட்’..!

News
தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.    குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார்.    கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..   தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்ச...
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவில் டு லெட்

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவில் டு லெட்

News
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படவிழாவில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டு லெட் திரைப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுதல்களை அள்ளிக்குவித்த இப்படத்துக்கு கோவாவிலும் கைதட்டல் பலமாவே இருந்தது. அடுத்த நாள் மீடியா சென்டரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது, பிரபல இயக்குநர்கள் பலரின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுபவம்தான் தன்னை இயக்குநராக்கியது என்றும், வாடகை வீடு தேடும் வேட்டையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்தே டு லெட் படத்தை இயக்கியதாகவும் குறிப்பட்டார் செழியன். தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் பலரும் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கு பெற்றனர்....